சென்னை : நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லால் சலாம் சூட்டிங்கில் இணையவுள்ளார்.
இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் மும்பையில் நாளை துவங்கவுள்ள நிலையில், அந்த சூட்டிங்கில் ரஜினிகாந்த் இணையவுள்ளார்.
இதற்காக சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டு சென்ற ரஜினியை, விமானநிலையத்தில் பார்க்க முடிந்தது.
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரஜினிகாந்த் : நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் சிவா இயக்கத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஆண்டில் வெளியானது. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார். படத்தில் குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களே நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல்மழை பொழிந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை, வித்தியாசமான வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக ஜெயிலர் வெளியாக உள்ள நிலையில் ஒவ்வொரு மொழியிலும் நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக வீடியோவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லால் சலாம் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக மும்பைக்கு சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதையொட்டி அவரை விமானநிலையத்தில் பார்க்க முடிந்தது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமான அளவில் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி அவர் போகும்போது ஜெயிலர் வீடியோ சூப்பர் தலைவா என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து அவர்களுக்கு கையசைத்து நன்றி சொல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
#Thalaivar #SuperStar #Rajinikanth #Jailer #LalSalaam
மும்பை பயணம்…
(வாட்ஸப்பில் வந்தது) pic.twitter.com/lIyXtf1rbe— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) May 7, 2023
மும்பையில் நாளைய தினம் துவங்கவுள்ள லால் சலாம் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங்கில் இணைகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதையொட்டி அவர் நீண்ட தாடியும் மீசையும் வளர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எப்போதும்போல கிளீன் ஷேவுடன் அவர் காணப்படுகிறார். இதனிடையே படத்தில் அவரது கெட்டப் மற்றும் கேரக்டர் பெயர் ஆகியவை நாளைய தினம் 12 மணியளவில் வெளியாகவுள்ளதாக லைகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது.