கலேஹே,-காங்கோவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் மாயமாகிஉள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெய்து வரும் கன மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கிவு ஏரி உடைந்து ஊருக்குள் பாய்ந்தது. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்து, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வெள்ளப்பெருக்கால் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதுவரை, 203 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் மாயமாகிஉள்ளதாகவும் தேசிய மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்புப்பணி தொடர்ந்து முடுக்கி விடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பல பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், நிவாரணப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், காங்கோவின் அண்டை நாடான ருவாண்டாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 129 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement