ஹரிஷ் கல்யாண் புதிய படத்தின் அப்டேட்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண். தற்போது டீசல், எல்.ஜி.எம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் இப்போது ஒரு புதிய படத்தை சத்தமில்லாமல் நடித்து முடித்துள்ளார் ஹரிஷ்.
ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ளார். இந்த படத்தை பலூன் பட இயக்குனர் சினிஸ் ஸ்ரீ தரன் தயாரித்துள்ளார். இவரின் உதவி இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பார்கிங் என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.