ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் மே 2023 #Ampere #Ampereprimus

இந்தியாவின் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஆம்பியர் நிறுவனத்தின் மாடல்களின் பேட்டரி, ரேஞ்சு, சார்ஜிங் நேரம் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

ஆம்பியர் நிறுவனம், தற்பொழுது மூன்று பேட்டரி ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது. அவை, பிரைமஸ் , மேக்னஸ் EX,  மற்றும் ஜீல் EX ஆகும்.

ampere-primus-color

Ampere Primus

அம்பியர் நிறுவனத்தின் அதிகவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற பிரைமஸ் மாடலின் அதிகபட்ச வேகம் 77Km/h மற்றும் முழுமையான சிங்கிள் சார்ஜில் 107 Km பயணிக்கலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டுளது. 12 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குவதுடன் நேவிகேஷன் அசிஸ்ட் வழங்குகின்றது. ஆம்பியர் பிரைமஸ் மின்சார ஸ்கூட்டரின் தமிழ்நாடு எக்ஸ்ஷோரும் விலை ₹ 1,09,900 ஆகும்.

Ampere Primus Specification
Battery pack 3.00 kWh
Top Speed 77 km/h
Range (IDC claimed) 107 km
Real Driving Range 70-80 km
Charging Time 5 hrs
Riding modes Eco, Power,City, Reverse

பிரைமஸ் ஸ்கூட்டருக்கு போட்டியாக பஜாஜ் சேட்டக், ஒகினவா ப்ரைஸ் புரோ, டிவிஎஸ் ஐக்யூப், ஏதெர் 450x விடா வி1, பிகாஸ் D15, ஓலா S1 ஏர் உள்ளிட்ட மாடல்கள் உள்ளது.

2023 ஆம்பியர் பிரைமஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,18,450

Ampere Magnus EX

அடுத்த மாடல் ஆம்பியர் மேக்னஸ் EX ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 53Km/h ஆக உள்ள நிலையில் ரிமுவெபிள் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச பவர் 1.2Kw வெளிப்படுத்துகின்ற இந்த மாடலில் 2.295 kWh பேட்டரி பொருத்தப்பட்டு சிங்கிள் சார்ஜில் 100 km வரை வழங்கும்.

Ampere Magnus EX Specification
Battery pack 2.295 kWh
Top Speed 53 km/h
Range (IDC claimed) 100 km
Real Driving Range 60-70 km
Charging Time 6 hrs
Riding modes Eco, Reverse

மேக்னஸ் EX மின்சார ஸ்கூட்டருக்கு போட்டியாக ஓலா எஸ்1 ஏர், ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா, ஒகினாவா பிரைஸ் உள்ளிட்ட மாடல்கள் உள்ளது.

2023 ஆம்பியர் மேக்னஸ் EX எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 91,450

Ampere Zeal EX

இறுதியாக ஆம்பியர் ஜீல் EX ஸ்கூட்டர் மாடல் அதிகபட்சமாக 50Km/h வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 120Km ரேஞ்சு வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் சேர்க்கப்பட்டு 2.3 kWh லித்தியம் ஐயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் நேரம் 7 மணி நேரம் ஆகும்.

Ampere Zeal EX Specification
Battery pack 2.3 kWh
Top Speed 53 km/h
Range (IDC claimed) 120 km
Real Driving Range 80-90 km
Charging Time 7 hrs
Riding modes

ஜீல் EX மின்சார ஸ்கூட்டருக்கு போட்டியாக ப்யூர் இபுளோடோ, ஒகினவா ரிட்ஜ், ஓலா எஸ்1 ஏர் போன்றவை உள்ளது.

2023 ஆம்பியர் Zeal EX எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 81,450

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலைகளும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல் ஆகும். விலை விபரம் அனைத்தும் தோராயமானதாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.