‘லியோ’ படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர். கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் சோஷியல் மீடியாவை அதிர விட்டு வருகிறது. அந்த வகையில் ‘லியோ’ படத்தில் மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்த நடிகை இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் நடிப்பில் கடைசியாக ‘வாரிசு’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழியில் ரிலீசான இந்தப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சங்கீதா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்தப்படத்தில் நடித்திருந்தனர். பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் ‘வாரிசு’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப்படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘மாஸ்டர்’ படம் வெளியாகியிருந்தது. இந்தப்படம் ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களை குவித்திருந்தது.
இதனையடுத்து தற்போது உருவாகி வரும் ‘லியோ’ படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அங்கு சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியா திரும்பியுள்ள படக்குழு விரைவில் அடுத்தக்கப்பட்ட படப்பிடிப்பை துவங்கும் என கூறப்படுகிறது.
Vidaamuyarchi: மகிழ் திருமேனி போட்டுள்ள பக்கா பிளான்: சம்பவத்திற்கு தயாராகும் ஏகே.!
இந்நிலையில் ‘லியோ’ படத்தில் பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் மலையாள நடிகை ஒருவரும் இந்தப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்த சாந்தி மாயாதேவி ‘லியோ’ படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சாந்தி மாயாதேவி இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
View this post on InstagramA post shared by Santhi Mayadevi (@santhi_mayadevi)
‘லியோ’ படத்தில் விஜய்யுடன் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு திரிஷாவும் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். மேலும், அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
Lal Salaam: இஸ்லாமியராக மாறிய ரஜினி: மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்.!