அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் கோடைகால சிறப்பு விற்பனை தள்ளுபடிகள் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி மொபைல்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர காஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை வாடிக்கையாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் 15 ஆயிரம் ரூபாய் மொபைல் வெறும் 500 ரூபாய்க்கு கூட பெற முடியும். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. இது ஒருபுறம் என்றால், பட்ஜெட் விலையில் இப்போது விற்பனையில் கிடைக்கக்கூடிய மொபைல்களை இங்கே பார்க்கலாம்.
Samsung Galaxy F04:
மீடியாடெக் ஹீலியோ பி35 செயலியுடன் கூடிய இந்த சாம்சங் போனை 39% தள்ளுபடியுடன் ₹ 6,999க்கு Flipkart விற்பனை செய்கிறது. போனில் டூயல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 13 எம்பி மெயின் பின் கேமராவும், 2 எம்பி இரண்டாவது டெப்த் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 எம்பி முன்பக்க கேமரா உள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ:
48எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இந்த போன் வருகிறது. இந்த போன் அமேசானில் மலிவு விலையில் விற்கப்படுகிறது, 37% தள்ளுபடிக்குப் பிறகு, இந்த போனை ₹ 8,499க்கு வாங்கலாம். வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அதை ரூ.8000-க்கும் குறைவாக வாங்க முடியும். தொலைபேசியில் 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளது.
ரெட்மி 10 ஏ:
இந்த Redmi போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் MediaTek Helio G25 Octa-core சிப்செட் உடன் வருகிறது. Redmi 10A விற்பனையின் போது 31% தள்ளுபடிக்குப் பிறகு Flipkart இல் ரூ.7,569க்கு கிடைக்கிறது.
லாவா பிளேஸ் 2:
இந்த லாவா ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வகைகளில் வருகிறது. இந்த மொபைலில் 5000 mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜர் கிடைக்கும். இந்த போன் அமேசானில் ரூ.8,999க்கு 18% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. வங்கிச் சலுகைக்குப் பிறகு, நீங்கள் அதை ரூ.8000-க்கும் குறைவாக வாங்க முடியும்.