சென்னை : டீப் லோ நெக் உடையில் இருக்கும் நடிகை ஸ்ரேயா சரணை பார்த்து இணையமே திக்குமுக்காடி போய் உள்ளது.
தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் த்ரிஷாவின் தோழியாக அறிமுகமானார் ஸ்ரேயா சரண்.
அதன் பின் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
முன்னணி நடிகை : நடிகை ஸ்ரேயா சரண் டாப் நடிகையாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென படவாய்ப்பு குறைந்ததை அடுத்து, தன்னுடைய காதலரும் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரருமான ஆண்ட்ரூவ் கோக்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகும் தனது ரசிகர்களை திருப்திப்படுத்த இன்ஸ்டாகிராமில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.
இணையத்தில் ஆக்டிவ் : ஸ்ரேயாவை சினிமாவில் பார்க்க முடியாத ஏக்கத்தை இன்ஸ்டாகிராமில் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் தீர்த்துக்கொண்டனர். திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்ட நடிகை ஸ்ரேயா சரணுக்கு அண்மையில் ஒரு பெண்குழந்தை பிறந்த நிலையில், தனது குழந்தைக்கு ராதா என அழகான தமிழ் பெயர் வைத்துள்ளார்.
முக்கியமான ரோல் : தொடர்ந்து படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கும் நடிகை ஸ்ரேயா எஸ்எஸ் ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய்தேவ் கானுக்கு மனைவியாக நடித்திருந்தார். அதே போல இந்தி த்ரிஷ்யம் 2 படத்திலும், அண்மையில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி என பான் இந்திய படமாக வெளியான கப்ஸா படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
டீப் லோ நெக் : சினிமா விழா மேடைகளில் கிளாமரான உடைகளை அணிந்து வரும் நடிகை ஸ்ரேயா தற்போது, தனது முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி டீப் லோ நெக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். திருமணமாகி குழந்தை பிறந்து விட்டது என்றாலும் கூட அதே அழகுடன் கட்டுக்குழையாமல் தன்னுடைய அழகுகளை அழகாக படம் ஆகி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.