ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 எனும் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிர் பிழைத்ததாகவும், பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய விமானப்படையில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இந்த MiG-21 ஜெட் விமானமும் ஒன்று. மணிக்கு சுமார் 2,229 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த 2ம் தலைமுறை விமானமானது தற்போதைய 5ம் தலைமுறை விமானத்திற்கு கூட சவால் விடக்கூடியதாகும். சோவியத் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இந்த விமானம் தற்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த விமானத்தை இரண்டு நாடுகள்தான் பயன்படுத்துகின்றன. ஒன்று ரஷ்யா மற்றொன்று இந்தியா.
இந்நிலையில் இன்று இந்த விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது. அதாவது இந்த விமானம் இன்று காலை சூரத்கரிலிருந்து புறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியில் பொதுக்கள் வசிக்கும் பகுதியில் விமானம் விழுந்து நொருங்கியுள்ளது. இந்த விபத்தில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்ததாகவும், விமானி அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.