சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக மாறியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]