Cyclone Mocha: 'மோக்கா' மிகத் தீவிர புயலாக மாறும்.. யாருக்கு ஆபத்து? ஆந்திர வெதர்மேன் தகவல்!

வங்கக்கடலில் உருவாகும் மோக்கா புயல் தீவிர புயலாக மாறி எங்கு கோரத் தாண்டவம் ஆடும் என கூறியிருக்கிறார் ஆந்திரபிரதேச வெதர்மேன்.

காற்றழுத்த தாழ்வு பகுதிதமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதே போன்று, தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
​ 12th Result: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எத்தனை பாடங்களில் எவ்வளவு பேர் 100க்கு 100?​
தமிழகம் புதுச்சேரியில் மழைமேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் நோக்கி நகர்ந்து புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
​ 12th Result: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. அடித்து தூக்கிய விருதுநகர்.. மாநிலத்திலேயே முதலிடம்!​
சென்னையில் மழைமேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கு மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
Kerala: குருவாயூர் கோவிலில் எடைக்கு எடை வாழைப்பழத்தை துலாபாரமாக வழங்கிய ஆளுநர்!​
ஆந்திர வெதர்மேன்இதன் காரணமாக இந்த நாட்களில், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே ஆழ் கடலுக்கு சென்றவர்கள், இன்று கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் மோக்கா புயல் எங்கு கரையை கடக்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் ஆந்திரபிரதேச வெதர்மேன் அதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மிகத் தீவிர புயலாகும்..அதில் மோக்கா புயலால் ஆந்திரப்பிரதேசம் மற்றும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் முற்றிலுமாக இருக்காது என்று கூறியுள்ளார். மேலும் இந்த மோக்கா புயல் இது மிகத் தீவிர புயலாக மாறி மியான்மரை தாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கான அனிமேஷன் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ஆந்திரபிரதேச வெதர்மேன்.
Cyclone Mocha turn into an Extremely Severe Cyclone says Andhra Pradesh weatherman

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.