”படிப்பு தான் சொத்து என்று நினைத்து படித்தேன்” – 600க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினி பேட்டி 

சென்னை: “படிப்பு தான் சொத்து என்று நினைத்து படித்தேன்” என்று பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி தெரிவித்தார்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 7,55,451. தேர்ச்சி சதவீதம் 94.03%. மாணவியர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 4,05,753. தேர்ச்சி சதவீதம் 96.38. மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 3,49,697. தேர்ச்சி சதவீதம் 91.45. மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்று என்று 6 பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை குறித்து மாணவி நந்தினி கூறுகையில்,”இவ்வளவு மதிப்பெண் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று அனைவரும் எனக்கு ஊக்கம் அளித்தனர். படிப்பு மட்டும் சொத்து என்று கூறி தான் பெற்றோர்கள் என்னை வளர்த்தார்கள். படிப்பதுதான் எனது சொத்து என்று நினைத்து படித்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.