இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Vidaa Muyarchi update: விடாமுயற்சி படப்பிடிப்பு சற்றே தள்ளிப் போயிருக்கிறது. மேலும் படப்பிடிப்பை எத்தனை நாட்களில் முடிக்க மகிழ்திருமேனி திட்டமிட்டிருக்கிறார் என்பது தெரிந்துவிட்டது.
விடாமுயற்சிமகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் தலைப்பை மே 1ம் தேதி வெளியிட்டனர். இதையடுத்து மே இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் 2வது வாரம் இல்லை மாறாக மே 22ம் தேதி தான் படப்பிடிப்பை துவங்குகிறார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே பைக் டூர் சென்றிருந்த அஜித் குமார் சென்னை திரும்பிவிட்டார்.
ஐஸ்வர்யா தத்தாமேடையில் உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா!
70 நாட்கள்Ajith: தலைக்கவசம் உயிர்க்கவசம்: அஜித் போட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்டாலின் ஐ.பி.எஸ்.விடாமுயற்சி படத்தின் முதல்கட்ட ஷூட்டிங்கை 70 நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளாராம் மகிழ்திருமேனி. படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய முடிவு எடுத்திருக்கிறார்களாம். அப்படி முடியவில்லை இல்லை கோடை விடுமுறையில் விடாமுயற்சியை வெளியிடுவார்களாம். என் பைக் டூர் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். படத்தின் தரம் தான் முக்கியம். நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் என மகிழ்திருமேனியிடம் கூறியிருக்கிறாராம் அஜித்.
மகிழ்திருமேனிமகிழ் திருமேனி இதுவரை 5 படங்கள் இயக்கியிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு படமும் அவர் பெயர் சொல்லும் வகையில் இருக்கிறது. படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதுடன் அதை ரசிகர்களுக்கு பிடித்தபடி கொடுப்பதில் கில்லாடி அவர். அதனாலேயே விடாமுயற்சி மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. அஜித் படத்தையும் நிச்சயம் வித்தியாசமாக எடுப்பார் மகிழ்திருமேனி என தாராளமாக நம்பலாம்.
தல தீபாவளி2023ம் ஆண்டு தல பொங்கல், தல தீபாவளியாக இருக்க வேண்டியது. பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக துணிவு படம் ரிலீஸானது. தீபாவளிக்கு ஏ.கே. 62 படம் ரிலீஸாக வேண்டியது. ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என ஓராண்டுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டார்கள். படப்பிடிப்பு துவங்க வேண்டிய ஜனவரி மாதம் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதையடுத்தே இந்த தீபாவளிக்கு அஜித் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை.
Vignesh Shivan: என்ன மனுஷன்யா இந்த விக்னேஷ் சிவன்: பாராட்டும் ரசிகர்கள், அப்படி என்ன செய்தார் தெரியுமா?
பைக் டூர்Ajith: பைக் டூர் போன இடத்தில் ஹோட்டலில் சமையல் செய்து அசத்திய அஜித்: வைரல் வீடியோவிடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கிவிட்டால் எங்கும் செல்ல முடியாது என்பதால் அதற்கு முன்பே தன் பைக்கில் நேபாளம், சிக்கிம் சென்றார் அஜித். தன் 52வது பிறந்தநாளை நேபாளத்தில் தான் கொண்டாடினார். அஜித் வந்த செய்தி அறிந்த நேபாள மக்கள் வரிசையில் நின்று அவரை பார்த்துச் சென்றார்கள். அவருடன் சேர்ந்து செல்ஃபி, வீடியோ எடுத்தார்கள்.
ரசிகர்கள்முன்னதாக துணிவு படத்தை இயக்கிய ஹெச். வினோத் சிறுத்தை சிவா போன்றே அப்டேட் தரவில்லை. நீங்கள் அப்படி இருந்துவிடாமல் அடிக்கடி அப்டேட் கொடுத்து எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என மகிழ்திருமேனியிடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடாமுயற்சி அறிவிப்புக்குமே அவர்கள் மாதக் கணக்கில் காத்திருந்ததால் உஷாராக தற்போதே மகிழ்திருமேனியிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
சரியான தலைப்புவிடாமுயற்சி என தலைப்பு வெளியானபோது அஜித் படத்திற்கு இதைவிட சிறப்பான தலைப்பை வைக்க முடியாது என்றார்கள் ரசிகர்கள். விடாமுயற்சிக்கு பெயர் போன ஒரு ஹீரோ அஜித். அதனால் இது தான் சிறந்த தலைப்பு ஆகும். விடாமுயற்சி அஜித் கெரியரில் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.