இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு தொர்பாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Cyclone Mocha: ‘மோக்கா’ மிகத் தீவிர புயலாக மாறும்.. யாருக்கு ஆபத்து? ஆந்திர வெதர்மேன் தகவல்!
மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான பிடி உஷா நேரில் சந்தித்து பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு துணை நிற்பதாகவும் அவர்களுக்கு வேண்டிய உதவிளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.
12th Result: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. அடித்து தூக்கிய விருதுநகர்.. மாநிலத்திலேயே முதலிடம்!
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு விவசாயிகள் நேற்று ஆதரவு தெரிவித்தனர். இரவில் மெழுகுவர்த்தியை ஏந்தியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை தடுக்கும் வகையில், காவல்துறையினர் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்கள் அருகே தடுப்புகளை அமைத்தனர். ஆனால் அந்த தடுப்புகளை வீசி எறிந்த விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல் பரவியது.
King Charles III: மன்னரின் முடி சூட்டு விழாவில் பேய்… பகீர் கிளப்பும் வீடியோ!
ஆனால் அதனை மறுத்த போலீசார், விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை சந்திக்க அவசர அவரசமாக விரைந்து சென்றதாகவும் அப்போது அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது அவர்கள் ஏறியதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை சந்திக்க வசதியாக குறுக்கே இருந்த தடுப்புகளை நீக்கியதாக தெரிவித்துள்ளனர். மேலும் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாக பரவும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் டெல்லி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்