சென்னை: நடிகை ஐஸ்வர்யா மேனன் பிறந்த நாள் அதுவுமா ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு ரசித்து பார்த்து வருகின்றனர்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன் , 1995ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார்.
பள்ளி படிப்பை ஈரோட்டில் பயின்ற இவர், கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் முடித்தார்.
ஐஸ்வர்யா மேனன் : 2013ம் ஆண்டு தமிழில் வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம், தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவ் : இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன், இணையத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஹாட் பீட்டை எகிறவைத்து வருகிறார். ஐஸ்வர்யாவின் கவர்ச்சி தரிசனத்தைப் பார்க்கவே இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 86.9K பாலோவர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
பிறந்தநாள் அதுவுமா இப்படியா : இன்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ஐஸ்வர்யா மேனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தில், உங்களுடன் இந்த பிறந்தநாளை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் நீங்கள் அதிக திரைப்படங்களில் பெரிய திரையில் என்னை பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், பிறந்தநாள் அதுவுமா இப்படியா போஸ் கொடுப்பீங்க என கேட்டு வருகின்றனர்.
அடுத்தடுத்த படங்களில் : நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது சித்த்தார்த்திற்கு ஜோடியாக ‘ஸ்பை’ என்றபடத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழை தவிர தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் புதிய வாய்ப்புகள் குவிந்து வருகிறது.