'தம்பி தங்கைகளே'.. தோல்விதான் வெற்றியின் தாய் – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சீமான் அறிவுறுத்தல்

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 3385 மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர். மானவர்கள் 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 21 ஆயிரத்து 13 பேரும் எழுதினர். இந்த நிலையில் இன்று (மே8) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

அதன் விவரம்;

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7,55,451 – 94.03%

மாணவியர் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர்

மாணவர்கள் 3,49,697 (91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர்

மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி

இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாணவி

மாநிலத்திலேயே திண்டுக்கல்லை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும், கல்வி நிறுவனங்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதுபோல 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டுகளையும், ஊக்கத்தையும் கொடுத்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை

சீமான்

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்வில் தோல்வியுற்ற தம்பி, தங்கைகளும் சிறிதும் மனந்தளர வேண்டாம்!

தோல்விதான் வெற்றியின் தாய்!

தோல்வி என்பது தோல்வியல்ல; அது வெற்றிக்கான முதற்படி!

இன்று தோல்வி வந்தடைந்த உன்னிடம்,

நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப்போவதில்லை!

தோல்விகளால் உன்னை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; நீ முயற்சிக்க தோற்காத வரை!

உலகில் வெற்றியின் சிகரம் தொட்ட சாதனையாளர்கள் அனைவரும் தோல்வியின் தழும்புகள் தாங்கியவர்கள்தான்!

ஆகவே, என் அருமை தம்பி, தங்கைகள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சியுங்கள். உறுதியாக வெற்றிப் பெறுவீர்கள்!

என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.