அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இன்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தனது இல்லத்துக்கு வந்த ஓ பன்னீர்செல்வத்தை வாசல் வரை வந்து டிடிவி தினகரன் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் இருந்தார்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை கூட்டாக அனைவரும் சந்தித்தனர். அதில் ஓபிஎஸ் தெரிவிக்கையில், “இருவரும் இணைந்து செயல்பட முடிவெடுத்துஉள்ளோம்.
அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளதால், நாங்கள் தற்போது இணைந்துள்ளோம்.
சசிகலா வெளியூரில் இருப்பதால் அவர் வந்தவுடன் விரைவில் அவரையும் சந்திப்பேன். தொண்டர்கள், மக்கள் மனதில் உள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.
கடந்த காலங்களை மறந்து விட்டு தற்போது இருவரும் ஒன்றிணைந்துள்ளோம். கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றபோது, மரியாதை நிமிர்த்தமாகவே சபரீசனை சந்தித்தேன். அரசியல் ரீதியாக நான் சந்திக்கவில்லை” என்றார் ஓபிஎஸ்.