நாட்டிலுள்ள கிராமப்புற வீதிகளில் பொதுப் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்து சபையினால் 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தும் திட்டத்திற்கு அமைய இரத்தினபுரி மாவட்டத்திற்கு 23 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பஸ்களை இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள டிப்போவிற்கு கையளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (07) நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
75 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு கிராமப்புற சாலைகளில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.