தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். கோலிவுட் சினிமாவே பெரிதும் எதிர்பார்க்கும் இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய்யின் ஆரம்பக்கால வெற்றிக்கு விதை போட்டவர் அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் முன்னணி நடிகர்கள் நடிப்பில் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் விஜய்யை வைத்தும் பல படங்களை இயக்கியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் விஜய்யும், எஸ்.ஏ. சந்திரசேகரும் மனஸ்தாபங்கள் காரணமாக பேசி கொள்வதில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு செய்திகள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டாலும் விஜய் இதுக்குறித்து எல்லாம் கண்டு கொள்வதே இல்லை. எஸ்.ஏ. சந்திரசேகர் மட்டும் அவ்வப்போது சில இடங்களில் விஜய் பற்றி பேசுவார்.
இந்நிலையில் எஸ்ஏசி தற்போது ‘கருமேகங்கள் கலைகிறது’ என்ற படத்தில் நடித்துள்ளார். தங்கர் பச்சான் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பாரதிராஜா, கெளதம் மேனன், யோகி பாபு, அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மொத்த வாழ்க்கையும் கண்முன் வந்தது: மோசமான விபத்தில் சிக்கிய ‘பொன்னியின் செல்வன்’ பாடகி.!
அதில், நானும் பாரதிராஜாவும் ஒரே காலக்கட்டத்தில் சினிமாவில் நுழைந்தோம். அவர் முதலில் இயக்குனராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குனராக சேர கேட்ட போது, நண்பராகவே இருப்போம்ன்னு சொல்லிட்டார். நானும் இயக்குனர் ஆகி காட்டுறேன்னு சொல்லி விட்டு வந்தேன். விஜய் நடிகராகணும் ஆசைப்பட்ட சமயத்துல பெரிய டைரக்டர் விஜய்யை அறிமுகப்படுத்துனா நல்லா இருக்கும்ன்னு ஆசைப்பட்டேன்.
பாரதிராஜா கிட்ட கேட்டப்ப நீயே பண்ணுன்னு சொல்லிட்டார். கெளதம் மேனனிடமும் ஆல்பம் எடுத்துட்டு போய் விஜய்க்காக வாய்ப்பு கேட்டேன். அவரும் பண்ணல. அதுவும் ஒரு விதத்துல நல்லது. விஜய் என் கையில் வந்ததாலே கமர்ஷியல் ஹீரோவானார். அதுக்கு கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார். எஸ்.ஏ. சந்திரசேகரின் இந்த பேச்சு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
PS 2: ரூ.300 கோடி வசூலை கடந்த ‘பொன்னியின் செல்வன் 2’: வெளியான மாஸ் அறிவிப்பு.!