சென்னை: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 19-ல் துணைத்தேர்வு நடத்தப்படும் என்றும், இதுகுறித்த முழுமையான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.