சென்னை இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன.
இதில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ளது கருமேகங்கள் கலைகின்றன
இயக்குநர் கௌதம் மேனன் : கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கௌதம் மேனன், பத்து வருடத்திற்கு முன்பே பள்ளிக்கூடம் படத்தில் நடிக்க தங்கர் பச்சான் என்னை அழைத்தார். அப்போது நான் நோ சொல்லிவிட்டேன். ஆனால், இப்போது அவர் என்னிடம் கேட்டதும் என்னால் நோ சொல்லமுடியவில்லை.
அழகான கதை : கருமேகங்கள் கலைகின்றன கதையை ஒரு புத்தகம் படிப்பதுபோல தங்கர்பச்சான் அழகாக சொன்னார். கதை கேட்டதும் பிடித்துவிட்டது அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் கதாநாயகனே பாரதிராஜா என்றார். இந்த படத்தின் நடிப்பதன் மூலம் அவருடன் பழக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
எனக்கு வருத்தம் தான் : இந்த படத்தில் தங்கர் பச்சான் என்னை நன்றாக டிரைன் பண்ணி நடிக்க வைத்தார். நிறைய எமோஷனல் காட்சிகள் இந்த படத்தில் இருக்கு அந்த காட்சியில் உண்மையில் என்னை அழவைத்தார். மேலும், யோகிபாபு கூட நடிக்க வேண்டும் என நினைத்தேன் ஆனால்,அவருடன் ஒரு சீன்கூட இல்லை அதுதான் எனக்கு இருந்த வருத்தமே.
உண்மையில் அடித்தார் : இப்படத்தில், பாரதி ராஜாவின் மகனாக நான் நடித்து இருக்கிறேன், ஒரு காட்சியில் எனக்கும் அவருக்கும் சண்டை நடந்து கொண்டு இருக்கும் அப்போது அவர் என்னை ஓங்கிஅடிக்க வேண்டும். ஆனால், அவர் என்னை அடிக்கவில்லை. அதன்பிறகு நான் அடிங்க அப்போதுதான் நன்றாக இருக்கும் என்று சொன்னபிறகுதான் அடித்தார். அந்த காட்சி உண்மையில் நன்றாக வந்து இருக்கிறது என்று இசைவெளியீட்டு விழாவில் கௌதம் மேனன் பேசினார்.
கமர்ஷியல் ஹீரோவானார் : இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ஆரம்பத்தில் பெரிய இயக்குநர்கள் யாரும் விஜய்யை வைத்து படம் இயக்க முன்வரவில்லை. அதுவும், ஒருவகையில் நல்லதுதான். அவர் என் கையில் வந்ததால்தான் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாறினார் என்று அவர் பேசியது, பரபரப்பாக பேசப்பட்டது.