இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ராஜா ராணி படம் மூலம் இயக்குநரான அட்லி நடிகை ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளத்தில் அறிவித்தார் ப்ரியா. இதையடுத்து ஜனவரி 31ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
மேடையில் உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா!
இந்நிலையில் குழந்தைக்கு மீர் என பெயர் வைத்திருப்பதாக ப்ரியாவும், அட்லியும் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். குழந்தையின் முகம் தெரியாதபடி புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
அந்த அறிவிப்பை பார்த்ததும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அட்லிக்கும், ப்ரியாவுக்கும், குட்டி மீருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Dhanush: தனுஷுக்காக வேற லெவல் கதையை தேர்வு செய்த வெற்றிமாறன்: தேசிய விருது கன்ஃபர்ம்
அது என்ன அட்லி, மீர் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். கொஞ்சம் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்குமே என்றார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தான் அட்லி இயக்கியிருக்கும் முதல் பாலிவுட் படமான ஜவானின் ஹீரோ ஷாருக்கானின் தந்தையின் பெயர் மீர் என்பது தெரிய வந்திருக்கிறது.
ஷாருக்கான் அப்பாவின் பெயரை தன் மகனுக்கு சூட்டும் அளவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அட்லியை கவர்ந்துவிட்டாரா, தப்பில்ல தப்பில்ல என்கிறார்கள் ரசிகர்கள்.
ஜவான் படம் ஜூன் மாதம் ரிலீஸாவதாக இருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் மாதம் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள். அந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லியின் ராசியான நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் விஜய் சேதுபதி, ப்ரியா மணி, யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக தளபதி விஜய் கவுரவத் தோற்றத்தில் வருகிறார். ஜவான் படத்தில் விஜய் நடிக்கிறார் என்று முன்பே தகவல் வெளியானது. ஆனால் அதை யாரும் உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த ஷாருக்கான் தான் ஜவானில் விஜய் நடித்திருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
Vijay: தளபதி விஜய் பற்றி சூப்பர் மேட்டர் சொன்ன ஜவான் ஷாருக்கான்: இது போதுமே
ஜவான் பட போஸ்டரில் ஷாருக்கானின் முகம் தெரியாதபடி பேன்டேஜ் போட்டுவிட்டிருக்கிறார் அட்லி. என்னஜி போஸ்டரில் உங்களின் முகத்தை பார்க்க முடியவில்லையே என ரசிகர்கள் ஷாருக்கானிடம் ஃபீல் செய்தார்கள். இதையடுத்து தன் முகம் தெரியும்படியான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் சொல்லிவிடாதீர்கள் என்றார்.
அட்லி அப்பாவாகிவிட்டார், பாலிவுட் சென்றுவிட்டார். அதுவும் முதல் இந்தி படத்திலேயே சூப்பர் ஸ்டாரை இயக்கியிருக்கிறார். மனிதர் மச்சக்காரர் தான். எப்பொழுதும் நல்லதே நடக்கிறது. இனியும் அப்படியே நடக்கட்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
திரையுலக பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்கிறார்கள். நயன்தாரா தன் இரட்டை மகன்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைத்தார். இந்நிலையில் அட்லி தன் மகனுக்கு மீர் என வித்தியாசமான பெயர் சூட்டியிருக்கிறார்.
மகனுக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் அக்கா நயன்தாராவையே மிஞ்சிவிட்டார் தம்பி அட்லி என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஜவான் படத்தை முடித்துவிட்டு விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்குவார் அட்லி என்று கூறப்பட்டது.
ஆனால் தளபதி 68 படத்தை அட்லி அல்ல கோபிசந்த் மலினேனி இயக்குகிறாராம். வம்சி பைடிபல்லியை அடுத்து மீண்டும் தெலுங்கு இயக்குநர் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். கோபிசந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகும்.