சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே 2. இந்தப் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
ஜோடி மாறிய திருமணம், அது ஏற்படுத்திய பிரச்சினைகள் என அடுத்தடுத்த எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தத் தொடரின் தற்போதைய பிரமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தன்னுடைய மனைவியின் மனதை மாற்ற ஜீவா மேற்கொள்ளும் அடுத்தடுத்த முயற்சிகள் இந்தப் பிரமோவில் காணப்படுகிறது.
பிரியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஜீவா :விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 தொடர் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் ஜீவா -பிரியா மற்றும் பார்த்தி -காவ்யா என தற்போது ஜோடி சேர்ந்துள்ளனர். இதில் ஜீவாவும் காவ்யாவும் திருமணத்திற்கு முன்னதாக ஒருவரையொருவர் காதலித்த நிலையில், பார்த்தி மற்றும் பிரியாவிற்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது. திருமணத்தின்போது பிரியா கடத்தப்பட, பார்த்தியை காவ்யா திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது.
தான் ஜீவாவை காதலித்த நிலையில், பார்த்தியை சந்தர்ப்ப சூழலால் திருமணம் செய்யும் நிலைக்கு காவ்யா தள்ளப்படுகிறார். இதையடுத்து பிரியாவை ஜீவா மீட்டு கொண்டு வரும் நிலையில், அவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்தப்படுகிறது. இதனால் ஜோடி மாறி திருமணம் நடைபெற, இந்த ஜோடி, தங்களது இணையுடன் சேர முடியாமல் திக்கித் திணறிப் போகிறது. மாற்றி மாற்றி, பிரச்சினைகள் ஏற்பட, இந்த இரு ஜோடிகளும் ஒருவழியாக தங்களது மனதை மாற்றிக் கொண்டு சேர முயல்கின்றனர்.

தொடர்ந்து, பார்த்தியின் அத்தை, தன்னுடைய மகளுக்கு அவரை திருமணம் செய்ய முயற்சி மேற்கொள்கிறார். ஆனால் இறுதியில் காவ்யாவை புரிந்துக் கொள்ளும் பார்த்தி அவரை ஏற்றுக் கொண்டு, தன்னுடைய அத்தையின் சதித்திட்டத்தை முறியடித்து அவரது மூக்கை உடைக்கிறார். ஜீவா மற்றும் காவ்யாவின் காதல் விவகாரம் அனைவருக்கும் தெரியவர, பார்த்தி, காவ்யாவை ஏற்றுக் கொண்டு இணைகிறார். ஆனால் பிரியா, ஜீவா தன்னை நம்பாமல் ஏமாற்றி விட்டதாக அவரை ஏற்க மறுக்கிறார்.
இதனிடையே, பார்த்தி மற்றும் காவ்யா இணைந்ததாக ரசிகர்கள் மட்டுமில்லாமல் அவர்களது பெற்றோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் நினைத்ததற்கு மாறாக, காவ்யா, தன்னை நம்பாமல், தன்னிடம் உண்மையை மறைத்ததாக பிரியா போலவே, பார்த்தியும் போர்க்கொடி தூக்குகிறார். இதனால் இரு ஜோடிகளும் முறுக்கிக் கொண்டு, ஒருவரையொருவர் விலக்கிவிட்டுக் கொண்டு திரிகின்றனர். இந்நிலையில் பிரியா வீட்டிற்கு வரும் ஜீவா, அவரது ரூமிலேயே தங்குகிறார்.

இதுகுறித்து கேள்வி கேட்கும் பிரியா, தன்னுடைய அறையில் மற்ற பொருட்கள் இருப்பதை போலவே ஜீவாவையும் நினைத்துக் கொள்வதாக கூறுகிறார். ஒரே அறையில் ஒன்றாக இருப்பதால் மட்டும் தன்னுடைய மனம் மாறிவிடாது என்றும் கூறுகிறார். கோபத்தில் பிரியா தூக்கிப் போட்டு உடைத்த, தங்களது புகைப்படத்தையும் ஒட்ட வைத்து அதை அழகாக சுவற்றிலும் மாட்டி வைக்கிறார் ஜீவா. இத்தகைய செயல்களால் பிரியாவின் மனதை மாற்றும் முயற்சிகளில் ஜீவா ஈடுபடுகிறார்.