அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த மீது கார் மோதியதில் 8 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதசாரிகள் மீது மோதிய கார்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவுன்ஸ்வில்லி நகரில், புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்திற்கு வெளியே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது நபர் ஒருவர் காரை வேகமாக மோதியுள்ளார்.
இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்ததாக பிரவுன்ஸ்வில்லி பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் படுகாயமடைந்த மற்றொரு நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கைதான நபர்
ஜார்ஜ் அல்வாரெஸ் என்ற 34 வயது நபர் இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர் என்று அடையாளம் காணப்பட்டது. தப்பியோட முயன்ற அவரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Image: AP Photo/Michael Gonzalez
காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் சாண்டோவல் கூறுகையில், ‘இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடந்ததா என்பது இன்னும் விசாரணையில் உள்ளது. கொல்லப்பட்ட நபர்களில் குறைந்தபட்சம் சிலர் புலம்பெயர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பல சாலைகள் மூடப்பட்டன. பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் என்றும், அவர்களில் பலர் வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் செய்தியாளர்களிடம் கூறினர்.
Image: MICHAEL GONZALEZ / AP
Image: John Faulk/Reuters