சாலையோரம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியான நபர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சாலையோரம் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். 

ஆரணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ரமேஷ் என்பவர், அரியப்பாடி கூட்டுச்சாலை ஓரமாக உள்ள மரத்தடியில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது வேலூரிலிருந்து ஆரணி நோக்கி யமஹா FZ பைக்கில் அதிவேகமாக வந்த ஒருவன் ரமேஷ் மீது பயங்கரமாக மோதியுள்ளான். இதில் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த நபரும் படுகாயமடைந்தான்.

விநாடி நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்தை தாங்கிக்கொள்ள முடியாத ரமேஷின் நண்பர்கள், அவரது உடலைப் பார்த்து கதறித் துடித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.