தமிழக அமைச்சரவை மாற்றம் எப்போது? தேதி குறிச்ச ஸ்டாலின்… சிக்கும் பெரிய தலைகள்!

தமிழக அரசியலில் சமீபத்திய பேசுபொருளாக மாறியிருப்பது அமைச்சரவை மாற்றம். திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் சாதனைகளுடன் சர்ச்சைகளும் பின் தொடர்ந்து வந்துள்ளன. அதில் சில அமைச்சர்களின் பங்களிப்பும் காரணமாக அமைந்தது. உதாரணமாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தை சொல்லலாம். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்த போதிலும் திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதை பார்க்க முடிகிறது.

​பிடிஆர் பெயர் நீக்கம்ஏனெனில் திமுக அரசின் செயல் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளர்கள் பட்டியல் வெளியான போது முதலில் பிடிஆர் பெயர் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு அவரது பெயர் நீக்கப்பட்டது. இந்த சூழலில் தான் ரெட் லிஸ்ட் ஒன்றை தயாரித்து குறிப்பிட்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும், அமைச்சர்களின் பதவிகளை மாற்றம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்மறுவாழ்வு இல்லத்திற்கு அடிப்படை வசதிகளை செய்த ஸ்டாலின்
​அமைச்சரவை மாற்றம்கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 21ல் முடிவடைந்த நிலையில் உடனடியாக அமைச்சரவை மாற்றத்திற்கு காய்கள் நகர்த்தப்பட்டன. அதற்குள் பிடிஆர் ஆடியோ விவகாரம் சலசலப்பை உண்டாக்க அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இந்நிலையில் வரும் மே 23ஆம் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு புறப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் நிகழும் என்று கூறப்படுகிறது.​
​​
ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு மே 31ஆம் தேதி சென்னை திரும்புகிறார். எந்தெந்த அமைச்சர்களுக்கு சிக்கல் என்று கோட்டை வட்டாரத்தில் விசாரித்தால், ஆடியோ விவகாரத்தால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவரது துறை மட்டுமே மாற்றப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம்.
​தங்கம் தென்னரசு உடன் பேச்சுவார்த்தைஇதையொட்டி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறுகின்றனர். அவர் நிதியமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் உடன்பட மறுக்கிறாராம். அடுத்ததாக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் நீக்கப்படக்கூடும். அமைச்சரவையில் இவரது செயல்பாடுகள் தான் பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைமை கருதுகிறது.
​எஸ்.எம்.நாசருக்கு சிக்கல்சமீபத்தில் இவரது மகன் மீது வந்த புகார்களை அடுத்து, அவரை ஆவனி நகர செயலாளர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. எஸ்.எம்.நாசர் தற்போது திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக தொடர்ந்து வருகிறார். புதிதாக மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். இதுதவிர சிறிய அளவில் துறை ரீதியிலான மாற்றமும் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்கடந்த 2022 மார்ச் மாதம் அரசு ஊழியரை சாதி ரீதியில் திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் எழுந்த நிலையில் அவரது துறை மாற்றப்பட்டது. அதன்பிறகு 2022 டிசம்பர் மாதம் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் அமைச்சர் பதவிக்கான அதிகபட்ச எண்ணிக்கை (15 சதவீதம்) எட்டப்பட்டது.​
​​
இன்னும் 2 வாரங்களில்…இனிமேல் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய முடியாது. மாறுதல்கள், நீக்கம் போன்ற செயல்பாடுகளில் தான் ஈடுபட முடியும். இந்நிலையில் திமுக அரசின் அமைச்சரவை மாற்றத்தை அடுத்த இரண்டு வாரங்களில் எதிர்பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.