நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வந்தது. 5 டி20 போட்டிகளில் 2-2 என சமநிலையில் முடிவுற்றது. ஒரு போட்டி பாதியிலேயே நடக்காமல் கைவிடப்பட்டது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. 4 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் மே 6ஆம் தேதி 113 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதால் (4-1) மீண்டும் மூன்றாவது இடத்திற்கே வந்துவிட்டது. பாகிஸ்தான் அணியினால் 48 மணி நேரம் மட்டுமே ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்க முடிந்தது.
ஒருநாள் ஐசிசி தரவரிசை:
1) ஆஸ்திரேலியா – 113 புள்ளிகள்.
2) இந்தியா – 113 புள்ளிகள் .
3) பாகிஸ்தான் – 112 புள்ளிகள்.