சென்னை: திண்டுக்கல்லை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் நந்தினி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் அந்த மாணவியை வாழ்த்திய நிலையில், நடிகர் விஜய்யும் அந்த மாணவியை வாழ்த்தியதாக புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மாணவியை திண்டுக்கல்லை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ள புகைப்படங்களையும் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
லியோ ஷூட்டிங்கில் பிஸி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் நடிகர் மனோபாலாவின் மறைவு செய்தி அறிந்ததுமே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்று மனோபாலாவின் உடலுக்கு மாலை அணிவித்தார்.
லியோ ஷூட்டிங்கில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ள நிலையில், பிஸியாக நடித்து வரும் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலமாக திண்டுக்கல் மாணவியை கவுரவப்படுத்தவும் தவறவில்லை.
வரலாற்று சாதனை படைத்த மாணவி: பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்கள். அனைத்து பாடங்களிலும் சதம் அடித்த கூலித் தொழிலாளியின் மகள் நந்தினியின் வரலாற்று சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார் அந்த மாணவி. பல பிரபலங்களும் அந்த மாணவியை பாராட்டியும் வாழ்த்தியும் வரும் நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் அந்த மாணவியை வாழ்த்தி உள்ளனர்.
நடிகர் விஜய் வாழ்த்து: “தளபதி @actorvijay அவர்களின் வாழ்த்துக்களோடு, இன்று வெளியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி அவர்களுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.!” என விஜய்யின் வலதுகரமான புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யை சந்திக்க வாய்ப்பு: மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ள திண்டுக்கல் மாணவி நந்தினி நடிகர் விஜய்யையும் நேரில் சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அந்த மாணவியை வாழ்த்தி வருகின்றனர்.
தளபதி @actorvijay அவர்களின் வாழ்த்துக்களோடு,
• இன்று வெளியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி அவர்களுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பாராட்டி… pic.twitter.com/fndNsAaMtf— Bussy Anand (@BussyAnand) May 8, 2023