சாதனை நாயகி நந்தினிக்கு தங்கப் பேனா பரிசு: கவிஞர் வைரமுத்து பாராட்டு


12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய தங்கப் பேனாவை பரிசளித்து பாராட்டி இருக்கிறார்.

சாதனை நாயகி

திண்டுக்கல் மாவட்டம் பாரதி புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணகுமார் மற்றும் பாலப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி 12ம் வகுப்பு பொது தேர்தலில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் என 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

vairamuthu golden pen-கவிஞர் வைரமுத்துவின் தங்கப் பேனா

தங்கப் பேனா பரிசு

மாணவியின் நந்தினியின் இந்த சாதனையை பல தரப்பு மக்களும் பாராட்டி வரும் நிலையில், பிரபல தமிழ் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து, மாணவி நந்தியின் சாதனையை பாராட்டி அவரது தங்கப் பேனாவை பரிசளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது, இதை எப்படி பாராட்டுவது? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், “அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதை திண்டுக்கல் வந்து, நேரில் தருகிறேன்,”உன் கனவு மெய்ப்பட வேண்டும் பெண்ணே!”  என்றும் நந்தினியை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.