Queen Camilla: தங்க, வெள்ளி இழைகளால் எம்ப்ராய்டு செய்யப்பட்ட கவுன்… ராணி கமிலாவின் முடிசூட்டு விழா உடையில் இருந்த ரகசியம்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
முடிசூட்டு விழாவில் ராணி கமிலா அணிந்திருந்த உடையில் இடம்பெற்றிருந்த ரகசிய பெயர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாஇங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த 6 ஆம் தேதி முடி சூட்டிக் கொண்டார். ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மகனான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸான இவர் கடந்த 6 ஆம் தேதி முறைப்படி முடிசூடிக் கொண்டார்.
​ கல்லூரி மாணவியுடன் உல்லாசம்… இணையத்தில் பரவிய வீடியோ… அவமானத்தில் 65 வயது முதியவர் தற்கொலை!​
ஒரே மாதியான உடைபாரம்பரிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புனித எட்வர்ட்டின் கிரீடம் அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சார்லஸின் மனைவியான ராணி கமிலாவுக்கும் முறைப்படி மகுடம் சூடப்பட்டது. முடிசூட்டு விழாவுக்கு முன்னதாக மன்னர் சார்லஸும் ராணி கமிலாவும் ஒரே மாதிரியான உடை அணிந்து பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்திற்கு சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்றனர்.
​ Meena: சும்மா சொல்லாதீங்க… 46 வயசுன்னா நம்ப முடியாது… மீனாவின் அசத்தல் க்ளிக்ஸ்!​
தங்க இழையில் ரகசியங்கள்இந்நிலையில் கமிலா அணிந்திருந்த உடையின் ரகசியங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மன்னர் சார்லஸும் ராணி கமிலாவும் வெள்ளை நிற வெல்வெட் உடையை அணிந்திருந்தனர். கமிலா வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தார். அந்த உடையில் ராணி கமிலாவுக்கு நெருக்கமானவர்களின் பெயர்கள் தங்க இழைகளால் எம்ப்ராய்டு செய்யப்பட்டுள்ளன.
​ BiggBoss Suruthi: பிக்பாஸ் சுருதியா இது… வெள்ளை நிற சேலையில் அசரடிக்கும் போட்டோஸ்!​
செல்ல நாய்கள்தமது பிள்ளைகளான டாம் மற்றும் லாரா ஆகியோரின் பெயர்களும் அத்துடன் ஐந்து பேரப்பிள்ளைகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் சார்லஸ் மற்றும் கமிலாவின் மீட்பு நாய்கள் பெத் மற்றும் புளூபெல் ஆகியவையின் படமும் அவரது கவுனில் பொறிக்கப்பட்டிருந்தது. ராணி கமீலாவின் இந்த உடையை மறைந்த இளவரசி டயானாவுடன் பணியாற்றிய Bruce Oldfield என்பவர் வடிவமைத்துள்ளார்.
​ Tihar Jail Murder: சிறைக்குள் கொல்லப்பட்ட ரவுடி.. வேடிக்கை பார்த்த தமிழ்நாடு போலீஸ்… திருப்பி அனுப்பிய திகார் ஜெயில்!​
லத்தீன் மொழியில்மேலும் அவரது உடையில் CR என்ற எழுத்துக்களும் தங்கத்தால் இடம் பெற்றிருந்தது. இதில் “C” என்பது கமிலாவையும் “R” என்பது ரெஜினாவையும் குறிக்கிறது. ரெஜினா என்றால் லத்தீன் மொழியில் “ராணி” என்று பொருள். ராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு நவம்பரில் இது வெளியிடப்பட்டது. தி ராயல் ட்ராயிங் ஸ்கூலின் ஆசிரிய மற்றும் கல்விக் குழுவில் உள்ள ஒரு எழுத்தாளரான பேராசிரியர் இவான் கிளேட்டன் மற்றும் தி காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸில் ஹெரால்ட் ஓவியரும் எழுத்தாளருமான டிமோதி நோட் ஆகியோரால் இந்த சைஃபர் வடிவமைக்கப்பட்டது.
​ King Charles III: மன்னரின் முடி சூட்டு விழாவில் பேய்… பகீர் கிளப்பும் வீடியோ!​
நான்கு நாடுகளின் மலர்கள்மேலும் தங்கத்தால் பல பூக்களும் ராணி கமிலாவின் உடையில் எம்ப்ராய்டு செய்யப்பட்டிருந்தது. கமிலாவின் கவுனில் அமைக்கப்பட்டிருந்த கைகள் மற்றும் கஃப்களில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் உள்ள நான்கு நாடுகளை குறிக்கும் வகையில் அந்த நாடுகளின் மலர்கள் தங்கத்தால் எம்ப்ராய்டு செய்யப்பட்டிருந்தன. அதாவது இங்கிலாந்து ரோஜாக்கள், ஸ்காட்லாந்தின் திஸ்டில்ஸ், வேல்ஸின் டாஃபோடில்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஷாம்ராக்ஸ் ஆகிய மலர்கள் தங்கத்தால் எம்ப்ராய்டு செய்யப்பட்டிருந்தன. மேலும் வெள்ளி இழைகளால் இங்கிலாந்தின் அழகை பேசும் காட்டுப்பூக்கள் , செடிகள், மலர்கள் மற்றும் தேனீக்கள், கிராமப்புற அழகு என அனைத்தும் இடம்பெற்றிருந்தது.
​ Rajasthan Jet crash: வீட்டின் மீது விழுந்த போர் விமானம் அப்பாவி பெண்கள் 3 பேர் பலி… நூலிழையில் தப்பிய பைலட்!​
Queen Camilla’s coroantion gown secret messages

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.