குடியாத்தம் அருள்மிகு கெங்கையம்மன் சிரசு ஊர்வலத்தை முன்னிட்டு மே 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1ம் தேதி (மே 15ம் தேதி) அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் சிரசு விழுந்து வரும் கண்கொள்ள காட்சியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
இந்த நிலையில் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலத்தை முன்னிட்டு மே 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.