ஜவானில் 2 வேடத்தில் நடிக்கும் ஷாருக்கான்: அவரே உறுதி செய்தார்
தமிழில் ராஜா ராணி மெர்சல், தெறி, பிகில் படங்களை இயக்கிய அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ன படம் ஜவான். இதில் தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் தற்போது செப்டம்பர் 7ம் தேதி வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷாருக்கான்தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஜவான் வெளியீடு தாமதமாவது குறித்த ரசிகரின் கேள்விக்கு அவர் பதிலளித்தபோது “பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க, பட குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை. படக்குழுவினர் அனைவரும் சிறிதும் இடைவேளையின்றி பணியாற்றி வருகிறார்கள், தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். தற்போது அனைவரும் தங்களது வேலையை எளிதாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
ஜவான் ஒரு புது வகையிலான படைப்பு. இயக்குநர் அட்லீ மாறுபட்ட இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஜவானை பொருத்தவரை, அட்லி மற்றும் அவரது குழுவினரின் அணுகுமுறை என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது” என்றார்.