கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023: வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள், நட்சத்திர தொகுதிகள்… முழு விவரம்!

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாளை (மே 10) நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக தேர்தல் களம் என்பது பாஜக,
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக காணப்படுகிறது.

கர்நாடக தேர்தல் 2023

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரவுள்ளதால் கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை பாஜக ஆளும் ஒரே மாநிலமாக கர்நாடகா திகழ்கிறது. எனவே இதை இழந்துவிடக் கூடாது என்பதற்காக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2018 தேர்தலை போல் அல்லாமல் தனிப் பெரும்பான்மை பெற பல்வேறு வியூகங்களை வகுத்தது.

ஆட்சியை பிடிப்பது யார்?

இதற்கு சற்றும் சளைக்காமல் காங்கிரஸ் களப்பணி ஆற்றியது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். இதில் 36 தொகுதிகள் எஸ்.சிக்கும், 15 தொகுதிகள் எஸ்.டிக்கும் என தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை

வ.எண்தேர்தல் விவரம்நாள்1வேட்புமனு தாக்கல் தொடக்கம்13 ஏப்ரல் 20232வேட்புமனு தாக்கல் இறுதி நாள்20 ஏப்ரல் 20233வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை21 ஏப்ரல் 20234வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள்24 ஏப்ரல் 20235வாக்குப்பதிவு நாள்10 மே 20236வாக்கு எண்ணிக்கை13 மே 2023
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 58,282 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் நகர்ப்புறங்களில் மட்டும் 28,866 அடங்கும். ஒரு வாக்குச்சாவடியில் சராசரி வாக்காளர்கள் 883 பேர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போட திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 5.21 கோடி பேர் ஆகும்.

வ.எண்விவரம்எண்ணிக்கை1பெண்கள்2.59 கோடி பேர்2ஆண்கள்2.62 கோடி பேர்3100 வயதுக்கு மேற்பட்டவர்கள்16,976 பேர்4மூன்றாம் பாலினத்தனவர்கள்4,699 பேர்5முதல்முறை வாக்காளர்கள்9.17 லட்சம் பேர்
நட்சத்திர தொகுதிகள்

வ.எண்தொகுதிமுக்கியத்துவம்1வருனாமுன்னாள் முதல்வர் சித்தராமையா2ஷிகோவன்முதல்வர் பசவராஜ் பொம்மை3கனகபுராடிகே சிவக்குமார்4சன்னபட்னாமுன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி5ஷிகாரிபுராமுன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா6ராமநகராஹெச்.டி.தேவகவுடா பேரன் நிகில் குமாரசாமி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.