மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இரவு நேரத்தில் ஜான்வி கபூரின் பெஸ்ட் பிரெண்ட் உடன் டேட்டிங் சென்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் பாலிவுட்டில் பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது.
200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோசடி மன்னன் சுகேஷ் சந்திராவை நடிகை ஜாகுலின் காதலித்து வந்த நிலையில், தற்போது இன்னொரு நபருடன் இப்படி நைட் நேரத்தில் சுற்றுகிறாரா என பெரும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
ஜான்வி கபூருடன் நெருக்கமாக பழகி வந்த ஆரன் அவத்ரமணியுடன் தான் தற்போது ஜாக்குலின் நெருக்கமாக பழகி வருகிறார் எனக் கூறுகின்றனர்.
மோசடி மன்னன் உடன் காதல்: இலங்கையில் மாடல் அழகியாக இருந்து வந்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை மும்பைக்கு அழைத்து வந்து மிகப்பெரிய பாலிவுட் நடிகையாக மாற்றியதே மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா தான் எனக் கூறுகின்றனர்.
சுகேஷ் உடன் படு நெருக்கமாக லிப் லாக் அடித்துக் கொண்டிருக்கும் ஜாகுலின் ஃபெர்னாண்டஸ் போட்டோக்கள் சிக்கிய நிலையில், சுகேஷுக்கும் அவருக்கும் இருக்கும் காதல் பற்றிய தகவல்களும் பத்து கோடி மதிப்பிலான பொருட்களை சுகேஷ் ஜாக்குலினுக்கு பரிசாக அளித்த விபரங்களையும் போலீஸார் வெளியிட்டு ஜாக்குலினிடம் பலமுறை விசாரணை மேற்கொண்டனர்.
சல்மான் கான் தோட்டத்தில் செட்டில்: 200 கோடி மோசடி வழக்கில் சுகேஷ் சிக்கி கைது செய்யப்பட்ட நிலையில், லாக்டவுன் நேரத்தில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் அடைக்கலம் கொடுத்ததாக கூறுகின்றனர்.
சல்மான் கானின் சகோதரியின் பண்ணை வீட்டில் லாக்டவுன் நேரத்தில் சல்மான் கான் உடன் தங்கியிருந்த ஜாக்குலின் உடன் சல்மான் கான் நடித்து இயக்கிய வீடியோ ஆல்பம் பாடலையும் அப்போது வெளியிட்டு இருந்தார்.
ஜான்வி கபூர் நண்பருடன் டேட்டிங்: இந்நிலையில், தற்போது நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிகை ஜான்வி கபூரின் நெருங்கிய நண்பரான ஆரன் அவத்ரமணியுடன் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற இசையமைப்பாளர் அன்ஷுல் கர்கின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தீயாக பரவி வருகின்றன.
நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சிறையில் இருக்கும் சுகேஷின் காதலை முறித்து விட்டு தற்போது இவருடன் தான் டேட்டிங் செய்து வருகிறாரா? என பாலிவுட் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.