திருகோணமலையிலிருந்து கண்டி வரை பாத யாத்திரை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்

இலங்கைத் தீவிற்கு சமய சகல துணை உரிமை கிடைக்கப்பெற்று 270 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு தாய்லாந்து நாட்டின் சுமார் 50க்கும் மேற்பட்ட பிக்குகளால் திருகோணமலையிலிருந்து கண்டி வரை பாத யாத்திரை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (08) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மே மாதம் 14 திகதி திருகோணமலையிலிருந்து ஆரம்பமாகும் இப்பாதயாத்திரை மே மாதம் 23 ஆம் திகதி பயணத்தின் முடிவான கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா விகாரைகளை சென்றடைய எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது பாதயாத்திரை ஆரம்பத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்தின் எல்லை முடிவு வரை தாய்லாந்து நாட்டின் பிக்குகளுக்கு வசதியளித்தல், பயணப் பாதையில் நடமாடும் செயற்பாடுகள், விளம்பரப்படுத்தல், போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.