கர்நாடகாவில் #ByeByeBJP: தட்டித்தூக்கும் காங்கிரஸ்.. கருத்து கணிப்பில் அபாரம்.!

கர்நாடகாவில் நாளை (மே10) பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இத்தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும்,
காங்கிரஸ்
223 பேரும், ஜேடி(எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு தொடங்கி, மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இரண்டாவது முறையாக கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக மிக தீவிர நுணுக்கங்களை கையாண்டு பிரச்சாரத்தை முடித்துள்ளது. மறு பக்கம் காங்கிரஸ் ஆரவாரமே இல்லாமல் மக்களின் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது. நாளை தினம் அங்கு வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் ட்விட்டரில் #ByeByeBJP என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கர்நாடகாவில் பாஜகவை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் ’40 சதவீத சர்க்கார்’ என்று விமர்சித்தது. அதாவது கர்நாடக மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த பாஜக அனைத்து துறைகளிலும் 40% கமிஷன் அடித்ததாக குற்றம்சாட்டியது காங்கிரஸ்.

மேலும், கர்நாடக மக்கள் பாஜக அரசின் மீது புகார் கொடுக்கலாம் என 40percentsarkara.com என்ற இணையதளத்தையும் தொடங்கியது. இதனை விளம்பரப்படுத்தியும் காங்கிரஸ் ஒரு வீடியோ வெளியிட்டது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாளை வாக்கு பதிவு நடக்கவுள்ள நிலையில், இன்று #ByeByeBJP என்ற ஹேஷ்டேகை கர்நாடகா மக்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கருத்து கணிப்பு

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடி(எஸ்) ஆகிய மூன்று முக்கிய அரசியல் கட்சிகள் நடத்திய பேரணிகள் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரச்சாரம் முடிந்த கையோடு இந்தியா டிவி நடத்திய கருத்து கணிப்பில் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளது. கணிப்புகளின்படி, காங்கிரஸ்105 இடங்களையும், ஆளும் பாஜக 85 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (எஸ்) 32 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.