ஷாருக்கான் மகனை போதைப்பொருள் வழக்கில் கைது செய்த அதிகாரி டிஸ்மிஸ்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த 2021ம் ஆண்டு அக்.,2ல் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2022, மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கைது செய்யப்பட்டவர்களில் ஆர்யன் கான் மற்றும் 5 பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை.
ஆர்யன் கான் வழக்கில் பிரத்யேக ஆர்வம் காட்டியதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் சமீர் வான்கடே இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்தும் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், ஆர்யன் கானை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட சோதனையில் இடம்பெற்றிருந்த போலீஸ் அதிகாரி விஷ்வ விஜய் சிங், பின்னர் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் விஷ்வ விஜய் சிங் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அது ஆர்யன் கான் வழக்கில் அல்லாமல், வேறு ஒரு வழக்கு தொடர்பானது என போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் சத்ய நாராயண் பிரதான் தெரிவித்துள்ளார்.