மாஸ்கோ, ”மேற்கத்திய நாடுகளின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றுவதற்காக எங்கள் நாடு மீது போர் திணிக்கப்பட்டுள்ளது,” என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறிப்பிட்டார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்தாண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. இது, 14 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் நாஜி படைகளை வீழ்த்தியதை குறிப்படும் வகையில், வெற்றி தினக் கொண்டாட்டம் நேற்று நடந்தது.
மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் ராணுவத்தினர் அணிவகுப்பை மரியாதையை ஏற்று, ரஷ்ய அதிபர் புடின் பேசியதாவது:
தற்போது மனிதகுலம் மீண்டும் ஒரு முக்கிய திருப்பத்தை சந்தித்து வருகிறது. நம் நாட்டின் மீது உண்மையான போர் தொடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவை அழிக்க வேண்டும், அதன் பெருமையை குலைக்க வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றும் முயற்சியில், நம் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷ்யப் படைகள், 25 ஏவுகணைகளை நேற்று முன்தினம் ஏவியது. அதில், 23 ஏவுகணைகளை நடுவழியில் வீழ்த்தியதாக உக்ரைன் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement