பல உயிர்களை காவு வாங்கிய பட்டினி வழிபாடு… பின்னணியில் நடுங்கவைக்கும் சதி: வெளியாகும் தகவல்


கென்யாவில் தேவாலயம் ஒன்றில் பட்டினி வழிபாட்டில் ஈடுபட்டு உயிரை விட்ட பலரது சடலங்களை உடற்கூறு ஆய்வு செய்ததில் பெரும் சதி அம்பலமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உள் உறுப்புகள் மாயம்

பல சடலங்களில் உள் உறுப்புகள் மாயமானது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது வலுக்கட்டாயமாக நீக்கம் செய்யப்பட்டதாக சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பல உயிர்களை காவு வாங்கிய பட்டினி வழிபாடு... பின்னணியில் நடுங்கவைக்கும் சதி: வெளியாகும் தகவல் | Kenya Cult Deaths Missing Organs Autopsies @reuters

அத்துடன், இந்த விவகாரத்தில் விரிவான ஆய்வு ஒன்றை புதிதாக துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலின் கரையோர நகரமான மலிந்திக்கு அருகே கடந்த மாதம் பல பேர்களை கொத்தாக புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் தீவிர கிறிஸ்தவ மத விசுவாசிகள் பெரும்பான்மையாக இருக்கும் கென்யா நாட்டு மக்களை திகைக்க வைத்தது.
முதற்கட்ட விசாரணையில், பால் மெக்கன்சி என்ற போதகர் ஒருவரின் விசித்திரமான தேவாலயத்தின் விசுவாசிகள் அவர்கள் என கண்டறியப்பட்டது.

கடவுளை நேரிடையாக காணும் பொருட்டு, பட்டினி வழிபாட்டுக்கு போதகர் பால் மெக்கன்சியே கட்டாயப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
பலரது மரணத்திற்கு பட்டினி முதன்மை காரணமாக கூறப்பட்டாலும், சிறார்கள் உட்பட சிலர் கழுத்தை நெரித்து அல்லது மூச்சு திணறடித்து, தாக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளது அம்பலமானது.

வலுக்கட்டாயமாக நடந்திருக்கலாம்

இந்த நிலையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் பல சடலங்களில் உறுப்புக:ள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது வலுக்கட்டாயமாக நடந்திருக்கலாம் என்ற அச்சத்தையும் அதிகாரிகள் தரப்பு முன்வைத்துள்ளது.

பல உயிர்களை காவு வாங்கிய பட்டினி வழிபாடு... பின்னணியில் நடுங்கவைக்கும் சதி: வெளியாகும் தகவல் | Kenya Cult Deaths Missing Organs Autopsies @getty

மேலும் இந்த பட்டினி வழிபாட்டிற்கு பின்னணியில் உடல் உறுப்பு வணிகமும் இருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
கடந்த மாதம் இதேப்போன்ற ஒரு குற்றச்சாட்டின் மீது மிக பிரபலமான போதகர் Ezekiel Odero என்பவர் கைது செய்யப்பட்டதுடன்,

பால் மெக்கன்சியின் தேவாலயத்தில் பட்டினி வழிபாட்டில் கலந்துகொள்ளும் விசுவாசிகள் தங்கள் சொத்துக்களை விற்று தேவாலயத்தில் ஒப்படைத்த தொகையில் பெரும்பகுதியை Ezekiel Odero கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நைரோபி நீதிமன்றம், ஓடெரோவுக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை 30 நாட்களுக்கு முடக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் இதுவரை 112 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மோசமான கால நிலை காரணமாக, அடையாளம் காணப்பட்ட கல்லறைகளை தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.