கொடைக்கானல்; சுற்றுலாவுக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல்… திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது!

​சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த​வர் வழக்கறிஞர் ராஜசேகர். இவர் ​சென்னை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். இவரின் மனைவி மீனாட்சியும் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இரு​க்கிறார். ​மீனாட்சி​, அவருடைய 2 மகன்கள்,​ உறவின​ர்களான கயல்விழி, அவரின் 2 பெண் குழந்தைகள் ​என​ மொத்தம் ​6 பேர் கொடைக்கானலுக்கு ​ஏப்ரல் 7-ம் தேதி சுற்றுலா வந்தனர்.

கொடைக்கானல்

​கொடைக்கானல், நாயுடுபுரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் இவர்கள் தங்கியிருந்தனர். ​​மீனாட்சி, கயல்விழி ஆகியோர் ​குழந்தைகளுடன் கொடைக்கானலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மறுநாள் காலையும் வெளியே செல்ல திட்டமிட்டனர். ஆனால் மீனாட்சிக்கு உடல்நலம்​ சரியில்லாததால் ​ஹோட்டலிலேயே இருந்திருக்கிறார். ​இதனால் ​கயல்விழி​ குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார். 

இந்த நிலையில் ​உடல்நலம் சரியில்லாத ​தன்னிடம் ​​ஹோ​ட்ட​ல் உரிமையாள​ரும், ​கொடைக்கானல் ஹோட்டல் ரிசார்ட் உரிமையாளர் சங்கத் தலைவராகவும்​, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கும் ​அப்துல்கனி ராஜா​ தவறாக நடந்து கொண்டதாக போலீஸாரிடம் ​மீனாட்சி ​புகார் அளித்தார். ​​அதில், உடல்நிலை சரியில்லாதது குறித்து அப்துல்கனி ராஜாவிடம் தெரிவித்ததாகவும், ஹோட்டலுக்கு வந்து உதவி செய்வதாகக் கூறி ​அவர், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கைதான அப்துல்கனி ராஜா

அதனடிப்படையில் கொடைக்கானல் போலீ​ஸா​ர் வழக்கு​ பதிவுசெய்​து, அப்துல்கனி ராஜாவைக் கைதுசெய்​தனர்.​ இதனைத் தொடர்ந்து வழக்கை திண்டுக்கல் போலீஸ் ஏ.டி.எஸ்.பி சந்திரன் தலைமையில், டி.எஸ்.பி சீ​​னிவாசன், இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் அப்துல்கனி ராஜாவின் ​ஹோட்டலிலிருந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.