டொனால்ட் டிரம்ப் குற்றவாளி… பல மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு


பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி

இதில் பல மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் E Jean Carroll என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி... பல மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு | Trump Found Guilty Jean Carroll Image: JUSTIN LANE

இழப்பீடாக 3 மில்லியன் டொலர் அளிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்பதை நீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், டொனால்டு டிரம்ப் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்பதை ஏற்க நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் மறுத்துள்ளது.

E Jean Carroll என்பருக்கு அளிக்கப்படவிருக்கும் 3 மில்லியன் டொலர் இழப்பீடு தொகையில் 2.7 மில்லியன் டொலர் இழப்பீடாகவும் 280,000 டொலர் தண்டனை செலவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பானது அவமானம்

நியூயார்க் நகரத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் நடுவர் மன்ற விவாதத்தின் முதல் நாளில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது பங்கேற்காத டொனலாடு டிரம்ப், கரோலை ஒருபோதும் பாலியல் துஸ்பிரயோகம் செய்யவில்லை என்றும் அவரை அறிந்திருக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி... பல மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு | Trump Found Guilty Jean Carroll @getty

மேலும், இந்த தீர்ப்பானது அவமானம் என்று தமது சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.