முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வம் விரைவில் சசிகலாவை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.
டிடிவியுடன் சந்திப்புஅமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அடையாறு இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். அதிமுக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமிடம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியைதான் தேர்தல் ஆணையமும் அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது.
கடும் விமர்சனம்இதனால் அதிமுகவும் அக்கட்சியின் சின்னமா இரட்டை இலையும் எடப்பாடி பழனிச்சாமியின் வசம் உள்ளது. ஆனால் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாங்கள்தான் உண்மையான அதிமுக என கூறி வருகிறார். இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரனை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். இதனை ஈபிஎஸ் அணியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சந்தர்ப்ப வாத சந்திப்புஎடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் , தினகரன் சந்திப்பு சந்தர்ப்ப வாத சந்திப்பு என்று விமர்சித்துள்ளார். அவர்கள் இருவரது சந்திப்பால் தமிழகத்தில் எந்த விதமான தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்ற அவர் இதனை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
அடைக்கலம் தேடி
மேலும் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் இப்போது அடைக்கலம் தேடி தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக டிடிவி தினகரனை சந்தித்துள்ளார் என்றும் கூறியிருந்தார். இதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும் ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
விரைவில் சந்திப்பேன்இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,தன்னை பற்றி விமர்சித்த ஆர்பி உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என கூறினார். விரைவில் சசிகலாவை சந்திக்கவுள்ளதாக கூறினார். சசிகலா மற்றும் டிடிவி தினகரனை எப்போது சந்திக்க உள்ளீர்கள் என்று பலரும் கேட்டு வந்ததாகவும் இந்தச் சூழலில் டிடிவி தினகரனை சந்தித்துள்ள தான் சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என்றார்.