Vivek On Manobala – அது கெடக்கு நீ வாடா ஒரு பீர போடுவோம் – விவேக்கிடம் ரகளை செய்த மனோபாலா

சென்னை: Vivek On Manobala (மனோபாலா குறித்து விவேக்) ஷூட்டிங் ஸ்பாட்டின்போது விவேக்கிடம் மனோபாலா ஜாலியாக நடந்துகொண்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.

மனோபாலாவுக்கு முதலில் சினிமாவில் பழக்கமானவர்கள் கமல் ஹாசனின் சகோதரர்களான சந்திர ஹாசனும், சாரு ஹாசனும், அதன் பிறகு கமலுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தின் போது மனோபாலாவின் திறமையை உணர்ந்துகொண்ட கமல்; பாரதிராஜாவிடம் பரிந்துரை செய்தார். கமலின் பரிந்துரையை மட்டும் நம்பாமல் மனோபாலாவின் திறமையை தெரிந்துகொண்டதால் தன் உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார் பாரதிராஜா.

வெற்றி இயக்குநர்: பாரதிராஜாவிடம் பல படங்களில் பணியாற்றிவிட்டு ஆகாய கங்கை படத்தை முதல்முதலில் இயக்கினார் மனோபாலா. அதனையடுத்து ரஜினிகாந்த், மோகன், விஜயகாந்த் உள்ளிட்டோரை வைத்து படங்களைஇயக்கி வெற்றி இயக்குநராக வலம் வந்தார். அதேபோல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படத்தை இயக்கியிருக்கிறார். கடைசியாக 2002ஆம் ஆண்டு நைனா படத்தை இயக்கியிருந்தார் மனோபாலா.

இயக்கத்துக்கு டாட்டா: அதனைத் தொடர்ந்து இயக்கத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். இயல்பாகவே அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் தான் தோன்றிய படங்களில் தனது நடிப்பின் மூலம் தனித்து தெரிய ஆரம்பித்தார். கடைசியாக அவர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியல் இயக்கிய மனோபாலா: இதற்கிடையே திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களையும் இயக்கியிருக்கிறார். அவர் இயக்கத்தில் உருவான பஞ்சவர்ணம், புன்னகை மன்னன் உள்ளிட்ட சீரியல்களை இயக்கிய அவர் சீரியல்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் வேஸ்ட் பேப்பர் என்ற யூட்யூப் சேனலை தொடங்கி நடத்திவந்த அவர், குக் வித் கோமாளியிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஜாலினா மனோபாலாதான்: சினிமா பொறாமையும், கோபமும் அதிகம் இருப்பவர்கள் புழங்கும் பகுதி என்ற கூற்று உண்டு. ஆனால் அதற்கு நேர்மாறானவர் மனோபாலா. சினிமாவில் எல்லோருடனும் சகஜமாக எந்தவித வேஷமும் இல்லாமல் பழகும் வெகு சிலரில் மனோபாலா முதன்மையானவர். இதன் காரணமாக அவருக்கு இண்டஸ்ட்ரியில் எதிரிகளே கிடையாது என்பார்கள். மேலும் ஈகோ பார்க்காமல் அவ்வளவு ஜாலியாக பழகுவாராம் மனோபாலா.

கப்பலில் ஷூட்டிங்: அப்படி விவேக்குக்கும், மனோபாலாவுக்கும் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது, ஒரு படத்தின் ஷூட்டிங் பிரமாண்ட சொகுசு கப்பலில் நடந்ததாம். அப்போது, இயக்குநருக்கு ஷாட் வைப்பதில் குழப்பம் வந்துவிட்டதாம். அதனால் அவர் ஓரமாக உட்கார்ந்து யோசித்திருக்கிறார். படத்தின் கேமராமேன் வேல்ராஜ் ஒற்றை ஆளாக லைட்டிங் செட் செய்ய அலைந்துகொண்டிருக்கிறார்.

Vivek shared his memory with actor and director manobala

அவன் பார்வையிலிருந்து பார்ப்பேன்: அப்போது விவேக்கிடம் வந்து பேசிக்கொண்டிருந்தாராம் மனோபாலா. அந்த சமயத்தில், உன் மேல ஒருத்தன் கோபப்பட்டா நீ என்னடா பண்ணுவ என்று கேட்டிருக்கிறார். அதற்கு விவேக், என் பக்கம் தப்பு இல்லனா நான் கோபப்படுவேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு மனோபாலா நானா இருந்தா என்ன செய்வேன் தெரியுமா, அவன் பார்வையிலிருந்து என்னை நான் பார்ப்பேன் என்றாராம்.

வாடா ஒரு பீரை போடுவோம்: அதனையடுத்து படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு ரொம்பவே தாமதமாகியிருக்கிறது. அதுகுறித்து விவேக் பேச்சை ஆரம்பித்தபோது உடனடியாக மனோபாலா விவேக்கிடம், அது கெடக்குது நீ வாடா நாம போயி ஒரு பீரை போடுவோம் என்று சொன்னாராம். இதனை விவேக் ஒரு நிகழ்ச்சியில் ஜாலியாக தெரிவித்தார். இப்படி இரண்டு மக்களை மகிழ்வித்த விவேக் மற்றும் மனோபாலா இன்று உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.