சூர்யகுமார் யாதவ் கம்ப்யூட்டரில் பேட்டிங் செய்வது போல் தெரிகிறது – கங்குலி

மும்பை,

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று 54வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் விளையாடிய’ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி 16.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 200 ரன்கள் எடுத்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது

இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சை சூர்யகுமார் யாதவ் நாலாபுறமும் பறக்க விட்டார் . அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அவர் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 83 (35) ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

உலகின் தலைசிறந்த டி20 கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ் தான் ..அவர் கம்ப்யூட்டரில் பேட் செய்வது போல் தெரிகிறது.என தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.