சூரியகுமார், நேஹல் அதிரடி: பெங்களூரு அணியை சிதறடித்த மும்பை


நடப்பு ஐபிஎல் தொடரில் 54வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் மற்றும் நேஹல் ஆகியோரின் அதிரடியால் 4 விக்கெட் இழப்பில் அபார வெற்றிபெற்றுள்ளது.

விராட் கோஹ்லி ஏமாற்றம்

நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தெரிவு செய்தது. இதையடுத்து, பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ், விராட் கோஹ்லி களமிறங்கினர்.

4 பந்தில் 1 ஓட்டம் எடுத்திருந்த விராட் கோஹ்லி முதல் ஓவரிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த அனுஜ் ராவத் 6 ஓட்டங்களில் வெளியேறினார். இதனால், பெங்களூரு 2.2 ஓவரில் 16 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

சூரியகுமார், நேஹல் அதிரடி: பெங்களூரு அணியை சிதறடித்த மும்பை | Mumbai Indians Won Royal Challengers

அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் அணித்தலைவர் டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் உள்பட 68 ஓட்டங்கள் குவித்த மேக்ஸ்வேல் கேட்ச் மூலம் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய லுமூர் 1 ரன்னில் வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய டு பிளசிஸ் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 65 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 30 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார். இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்தது. கேதார் ஜாதவ்(12), ஹசரங்கா(12) ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தனர்

மும்பை அணியின் ஜேசன் பெஹ்ரெட்ன்ரொப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை துவக்க வீரர்களில், அணித்தலைவர் ரோகித் சர்மா 8 பந்துகளை சந்தித்து 7 ஓட்டங்களில் வெளியேற இஷான் கிஷனுடன் சூரியகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.

சூரியகுமார், நேஹல் அதிரடி: பெங்களூரு அணியை சிதறடித்த மும்பை | Mumbai Indians Won Royal Challengers

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 21 பந்துகளை சந்தித்த இஷான் கிஷன் 42 ஓட்டங்கள் குவித்து ஹசரங்கா பந்தில் கேட்ச் மூலமாக வெளியேறினார்.
இதனையடுத்து நேஹல் வதேரா சூரியகுமாருடன் இணைந்தார்.

இருவரும் பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தனர். சூரியகுமார் யாதவ் 35 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 83 ஓட்டங்கள் குவித்து விஜய் குமார் பந்தில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய டிம் டேவிட முதல் பந்தில் விக்கெட்டை இழக்க, நேஹல் வதேராவுடன் கேமரன் கிரீன் ஜோடி சேர்ந்தார். இறுதியில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்பில் 200 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றிபெற்றது. 34 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 52 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் நேஹல்.

சூரியகுமார், நேஹல் அதிரடி: பெங்களூரு அணியை சிதறடித்த மும்பை | Mumbai Indians Won Royal Challengers



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.