பிளஸ் 2 பொதுத்தேர்வுவில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி, அனைத்து பாடங்களிலும் 100- க்கு 100 என்ற அடிப்படையில் 600 மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்து, மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். அந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும், வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன்; திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன்; உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!” என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.