சென்னை : ரேஞ்ச் ரோவர் கார் சாவி காணவில்லை என ரஜினியின் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் லதா தம்பதியரின் மகளும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் சகோதரியுமானவர் இயக்குனர் சௌந்தர்யா.
இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்னும் 3 டி அனிமேஷன் திரைப்படத்தையும், நடிகர் தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கி இருந்தார்.
ரஜினி மகள் : இயக்குனர் சௌந்தர்யா அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2வது குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் வைத்துள்ளனர்.
கார் சாவி காணவில்லை : இந்நிலையில் சௌந்தர்யா, ரேஞ்ச் ரோவர் கார் சாவி பவுச்சுடன் காணவில்லை என தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஏப்ரல் 23ந் தேதி கோபாலபுரத்தில் இருந்து தனியார் கல்லூரி சென்ற போது காரின் சாவி காணாமல் போனதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
நகை காணாமல் போனது : ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது வீட்டில் இருந்தா லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார். மேலும், தனதுவீட்டு பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
திட்டமிட்டு நகை திருடினர் : இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள், கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரும் ஐஸ்வரியாவின் வீட்டிலிருந்து திட்டமிட்டு நகைகளை திருடியது தெரியவந்தது.