Today Headlines 10 May 2023: இன்றைய தலைப்பு செய்திகள்… அமைச்சரவை மாற்றம் முதல் நடிகர் விஜய் பிளான் வரை!

தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிதாக மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். இவரது துறை பதவியேற்பிற்கு பின்னர் அறிவிக்கப்படும்.முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் துறை ரீதியிலான மாற்றங்கள் நிகழும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 11ஆம் தேதி டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பிற்கு பின்னர் அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறுகின்றனர்.சூடான் நாட்டில் சிக்கித் தவித்த 31 மாவட்டங்களை சேர்ந்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டனர். டெல்லி, மும்பை, கொச்சி, அகமதாபாத், பெங்களூரு வந்து இறங்கிய 247 பேரும் சொந்த ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பணியற்றும் அம்மாநில தொழிலாளர்களுக்கு இன்று ஒருநாள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்குமாறு தொழிலாளர் ஆணையத்தின் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 51,386 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் 18,071 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். 6,345 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

வரும் 15ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என மூவர் கூட்டணியில் கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யவுள்ளதாக கூறுகின்றனர்.பிளஸ் 2 தேர்வில் கல்வி மாவட்ட வாரியாக முதல் மூன்று இடக்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி பட்டியல் சேர்க்க விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம்.ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சந்தித்து பேசுகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அல்லாத அணியை உருவாக்க தொடர் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

உலகம்

பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகள் விரைவில் நீக்கப்படும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் பலரது பாலோயர்கள் அதிரடியாக குறையக்கூடும்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைது திடீரென ராணுவம் கைது செய்துள்ளனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வர்த்தகம்

சென்னையில் இன்று 354வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

விளையாட்டு

பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.