தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சவுந்தர்யா அளித்துள்ள புகாரில், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி சென்னை கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்ற போது ரேஞ்ச் ரோவர் கார் சாவி பவுச்சுடன் காணவில்லை என புகாரளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தன் வீட்டில் நூறு சவரணுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் காணாமல்போய்விட்டதாக புகார் அளித்திருந்தார்.
அதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றிய ஈஸ்வரி மற்றும் அவருடைய கணவர் வெங்கடேசனும் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களை கைது செய்த காவல்துறை, அவர்களிடம் இருந்த நூறு பவுனுக்கும் மேற்பட்ட நகைகள் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பிரபலங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிப்புக்குள்ளாக வேண்டி வந்தது. அதற்குள் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கார் சாவி தொலைந்து போனது தொடர்பாக அளித்துள்ள புகார் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.