ஹாசன், :தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் கதவை உடைத்து, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா தாலுகா ஹரதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவகவுடா, 40. தனியார் நிறுவன ஊழியர். மனைவி, பிள்ளைகளுடன் கவுரிகொப்பல் பகுதியில் வசிக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள், பிரசாந்தின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவை கள்ளச்சாவியை வைத்து திறந்தனர். அதற்குள் வைக்கப்பட்டு இருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்க நகைகளை திருடிவிட்டு தப்பினர்.
நேற்று முன்தினம் இரவு, தேவகவுடா வீட்டிற்கு வந்தார். அப்போது, நகைகள் திருடு போனது தெரிந்தது. அவரது புகாரின்படி, ஹொளேநரசிபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement