Donald Trump: பாலியல் வன்கொடுமை விவகாரம்… ரூ.41 கோடி இழப்பீடு வழங்க டொனால்டு ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்க பெண் எழுத்தாளர் இ ஜீன் கரோல் என்பவர் அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு ட்ர்ம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். 1996ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள உடை மாற்றும் அறையில் டொனால்டு ட்ரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார்.

ஆனால் ஜீன் கரோல் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தார் டொனால்டு ட்ரம்ப். இதனை தொடர்ந்து பெண் எழுத்தாளரான ஜீன் கரோல், நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை டொனால்டு ட்ரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார் ஜீன் கரோல்.

OPS: இந்துக் கடவுள்களை இழித்தும் பழித்தும் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நியூயார்க் கோர்ட்டு நீதிபதி லூயிஸ் சுப்லான் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், பெண் எழுத்தாளரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததில் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கும் அவரை அவமதிப்பு செய்ததற்கும் டிரம்ப் பொறுப் பேற்க வேண்டும் என்று என கூறினார்.

டிரம்ப் தன்னை கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறிய குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்று நிராகரித்தார் நீதிபதி. மேலும் குறைந்த அளவிலான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ட்ரம்ப் பொறுப்பு என்ற நீதிபதி 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 41 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

Karnataka Election 2023: சிலிண்டருக்கு ஆரத்தி காட்டி வழிபாடு… வாக்களிக்கும் முன்பு காங்கிரஸ் கட்சியினர் குசும்பு!

இந்த வழக்கில் விவாதம் தொடங்கி 3 மணி நேரத்திற்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வாசிக்கப்படும் போது அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆனால் தீர்ப்பு வழங்கியதுமே இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார் ட்ரம்ப். அதில் “ஜீன் கரோலை நான் ஒரு போதும் பாலியல் வன் கொடுமை செய்யவில்லை. அவரை எனக்கு யாரென்றே தெரியாது. இந்த தீர்ப்பு தனக்கு நேர்ந்த அவமானம் என குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் சிரித்தப்படியே கண்ணீர் விட்டார் ஜீன் கரோல். தனது வழக்குரைஞர்களை கட்டிப் பிடித்து அழுகையும் சிரிப்பும் கலந்தப்படியே நன்றி கூறிய ஜீன் கரோல், தன்னுடைய பெயரும் வாழ்க்கையும் தனக்கு திரும்பவும் கிடைத்துவிட்டதாகவும் இறுதியாக உலகம் உண்மை உலகிற்கு தெரிந்து விட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் இது தனக்கு மட்டுமின்றி தன்னை போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் கண்ணீர்மல்க கூறியுள்ளார் ஜீன் கரோல்.

Karnataka Election 2023: கைய குலுக்கலாம்… தென்னைய தலையில வைக்கலம் ஆனா தாமரைய… பிரகாஷ் ராஜ் கிண்டல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.